விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டதை அடுத்து, அக்டோபர் 2ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றிரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் பரவிய நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என தேமுதிக விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று (அக்டோபர் 7) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “விஜயகாந்துக்கு கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது, சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. அதில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. விஜயகாந்த் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**�,