சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைக் கண்காணிக்கச் சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
காவல் துறைக்கான பட்ஜெட்டை அறிவித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் 2 புதிய ஆணையகரங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.
அந்த வகையில் சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் விளைவாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
இம்மதிப்பீடுகளில் காவல்துறைக்கு ரூ.10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
**-பிரியா**