Z3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து நேற்று (ஜூலை 18) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

நில நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநராகவும்,

மீன்வளத் துறை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநர் கருணாகரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராகவும்,

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் / செயலாளராக இருந்த அதுல் ஆனந்த், தொழிலாளர் நல ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் சரவணனுக்கு, கூடுதலாகத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share