|அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா? ரஜினி விளக்கம்!

politics

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய நிலையில், இதுவரை அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இதனிடையே சில நாட்களுக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக வாட்ஸ் ஆப் குரூப்களில் ரஜினி பெயரிலான ஒரு அறிக்கை வெளியானது.

அந்த முழு அறிக்கையையும் [அரசியல்: ரஜினியின் சர்ச்சை அறிக்கை?](https://www.minnambalam.com/politics/2020/10/27/22/rajini-politics-not-come%3F) என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில், “மருத்துவர்கள் எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கொரோனா எளிதில் தாக்கக் கூடும். ஆகையால் இந்தக் கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் கவலை. நான் துவங்குவதோ புதுக்கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்” என ரஜினி தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்த அறிக்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்து ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 29) வெளியிட்ட அறிக்கையில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

pic.twitter.com/kcrG3ImCvA

— Rajinikanth (@rajinikanth) October 29, 2020

மேலும், “இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று விளக்கியுள்ளார் ரஜினிகாந்த்.

அதாவது, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன் என ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.