cநான் இந்து- இந்துத்வவாதி அல்ல- ராகுல்

Published On:

| By Balaji

விலைவாசி, விவசாயிகள் பிரச்சினை, ஒன்றிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று (டிசம்பர் 12) ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் பெரும் பேரணியை நடத்தியது காங்கிரஸ் கட்சி.

இந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி. நான் ஒரு இந்து. அவர்கள் இந்துத்துவாவாதிகள். விளக்குகிறேன். மகாத்மா காந்தி உண்மையைத் தேடினார், நாதுராம் கோட்சே மூன்று தோட்டாக்களை அவருக்குள் செலுத்தினார். காந்தி ஒரு இந்து. கோட்சே ஓர் இந்துத்வவாதி. நம்மைப் போன்ற இந்துக்கள் சத்தியாகிரகத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்துத்துவவாதிகள் உண்மையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

யார் இந்து? எல்லா மதத்தையும் மதித்து, யாருக்கும் பயப்படாதவர்தான் இந்து. ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் பொய்யான இந்துக்கள். இந்தியா இந்துத்துவ வாதத்தை அனுபவித்து வருகிறது. இந்த இந்துத்துவாவாதிகளை அகற்றி, நாங்கள் இந்து ராஜ்யத்தைக் கொண்டுவர விரும்புகிறோம்” என்றார் ராகுல் காந்தி.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, “இந்து மதம் என்றால் ஒரு சீக்கியரை அடிப்பதா, அல்லது முஸ்லிமை அடிப்பதா? அப்படி எங்கும் நான் படிக்கவில்லை. நான் உபநிடதங்களைப் படித்தேன். அதில் அப்படி எதுவும் இல்லை. இந்துத்வாவுக்கும் இந்துவுக்கும் இதுதான் வித்தியாசம். இது ஒரு எளிய தர்க்கம் — நீங்கள் ஒரு இந்து என்றால் உங்களுக்கு ஏன் இந்துத்துவா வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்தப் புதிய பெயர் தேவை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

**-வேந்தன்**.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share