அனைவருக்கும் தடுப்பூசி கொடுங்கள்…பிறகு மக்களிடம் பேசலாம்: ராகுல்

politics

நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு, மன் கி பாத் மூலம் மக்களிடம் உரையாற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பாக, பிரதமர் மோடி மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்.

இன்று(ஜூன் 27) காலை 11 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “ தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டக் கூடாது. தடுப்பூசி குறித்தான வதந்திகளை நம்பக் கூடாது. அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறித்த ஒரு வரைபடத்தை பதிவிட்டு, நீங்கள் ‘உங்கள் மனம்’ சொல்வதைக் கேட்க விரும்பினாலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மன் கி பாத் மூலம் மக்களிடம் உரையாற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை 31.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 26.25 கோடி பேர் முதல் டோஸூம், 5.50 கோடி பேர் இரண்டு டோஸூம் செலுத்திக்கொண்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *