{தொலைக்காட்சி விவாதங்களுக்கு கட்டுப்பாடுகள்!

politics

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி தனியார் தொலைக்காட்சிகள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“அண்மையில் பல்வேறு தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமற்ற, தவறான செய்திகள் வெளியிடுவதையும், சமூகத்தில் ஏற்று கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது.

உக்ரைன்- ரஷ்யா விவகாரம், டெல்லி வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட விவாதம் நிகழ்ச்சி நெறிமுறை கோட்பாட்டை மீறியதாக இருந்ததாக தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவ காட்சிகள் ஒளிபரப்புவதன் மூலம் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இட்டுக்கட்டப்பட்ட தலைப்பு செய்திகள் சமூக விரோத செயலுக்கு வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளது. தேவையற்ற விவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது” என்று ஒன்றிய அரசின் இன்றைய (ஏப்ரல் 23 ) பத்திரிக்கை அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.