தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு நிகழ்வையும் அதைத் தொடர்ந்து தேனீர் விருந்து நிகழ்வையும் நடத்துகிறார்.
சென்னையில் இருக்கும் பாரதிய வித்யா பவன் சார்பில் வழங்கப்பட்ட பாரதியார் சிலையை ராஜ்பவனில் ஆளுனர் திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து மாலை தேனீர் விருந்து அளித்தார். ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, இன்று காலை ஆளுநரை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துவிட்டனர்.
அதன்படியே தமிழக அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் ஆளுநர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
நீதித்துறை பிரமுகர்கள் ஆளுநர் அளித்துள்ள விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
**வேந்தன்**
.