Tதிமுக ‘கூட்டணி’யில் கமல்ஹாசன்

politics

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கவுள்ளது.

குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை அண்ணா அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 18) திமுகவின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 23ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் பேரணி நடைபெறவுள்ளது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனிடம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “அழைப்பு விடுத்தால் கண்டிப்பாகச் செல்வோம். அழையா வீட்டுக்கு நாங்கள் செல்லமாட்டோம்” என்று பதிலளித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், “இதுதொடர்பாக கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகளின் தலைவர்களைத்தான் அழைத்திருக்கிறோம் என்று அவரிடம் தெளிவாகச் சொன்னேன். தேவைப்பட்டால் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகள், அமைப்புகளையும் அழைத்து கூட்டம் நடத்தும்போது அவர் அழைக்கப்படுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு இன்று பிற்பகல் சென்று ஆதரவு தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “சென்னை தரமணியில் 800 மாணவர்கள் பட்டினியுடன் நேற்றிரவு முதல் இருந்துவருகிறார்கள். மாணவர்களின் விடுதிகள் சமையல் அறைகளை அரசு இழுத்து மூடிவிட்டனர். அவர்களில் சிலருக்கு அசாமில் வீடு இருக்கிறது. ஆனால், அங்கு போராட்டம் நடைபெற்றுவருகிறது. விடுதிக்கும் செல்ல முடியாமல், வீட்டிற்கும் செல்ல முடியாமல், போராடும் மாணவர்களை அகதிகளாக்கி இருக்கிறது இந்த அரசு” என்று குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து 23ஆம் தேதி நடத்தவுள்ள பேரணியில் கலந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு, “என்னுடைய மருத்துவர்கள் அனுமதித்தால் கலந்துகொள்வேன். இப்போதே மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறித்தான் இங்கு வந்துள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் அந்த பேரணியில் கண்டிப்பாக கலந்துகொள்ளும். இதனை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்துவந்த கமல்ஹாசன், தற்போது திமுகவுடன் நட்புப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார். கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் தற்போது தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் கூட, போராட்டக் களத்தில் கூட்டணி அமைத்திருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *