ஜெ.நினைவிடத்துக்கு மீண்டும் முதல்வராக வருவேன் -எடப்பாடி சபதம்!

politics

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்து 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று (ஜனவரி 27) மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவகத்தைத் திறந்து வைத்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். ஏராளமான அதிமுக தொண்டர்களும் திரளாகக் கூடியிருந்தனர். .

ஜெயலலிதா நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.. இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பீனிக்ஸ் பறவை போல அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தலைவர் ஒருவருக்கு டிஜிட்டல் அருங்காட்சியகமும் ஜெயலலிதாவுக்கு இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தைத் திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் அவரது அரசியல் சாதனைகள் வரை குறிப்பிட்டார். ‘இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் அழியாத எஃகு கோட்டையாக அதிமுக இருக்கும் என்று அம்மா குறிப்பிட்டார். அதை மெய்ப்பிக்கும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும். அதுவே நாம் ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றிக் கடன். மீண்டும் அம்மா ஆட்சியை அமைத்து நாம் அனைவரும் மீண்டும் இதே நினைவிடத்தில் நன்றி செலுத்த வீர சபதம் ஏற்போம்” என்று பேசினார் முதல்வர்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *