wரயிலை மறிப்பதற்கு ஊர்வலமாக சென்ற மீனவர்கள்!

politics

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி சிறைபிடிப்பதை இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். வழக்கம்போல் கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

அதேசமயம், மீனவர்களை விடுவிக்கக் கோரியும், தமிழக படகுகள் இலங்கையில் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிப்ரவரி 11ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் அறிவித்தனர்.

ரயில் மறியல் போராட்டத்தை கைவிடக் கோரி ராமேஸ்வர வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து திட்டமிட்டப்படி இன்று(பிப்ரவரி 11) மாலை 5 மணியளவில் ராமேஸ்வர மீனவர்கள் மற்றும் மீனவ கூட்டமைப்பை சேர்ந்தவர்கள்,பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள், சென்னை செல்லும் ரயிலை மறிப்பதற்காக மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். மீனவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தியே தீருவோம் என்று உறுதியாக இருக்கின்றனர். காவல்துறையினருக்கும், மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் படகுகள் ஏலம் விடும் பணியையும் தடுத்த நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0