சேலையில் தீ: பிரச்சாரத்தை நிறுத்தி பரிகாரம் செய்த பெண் வேட்பாளர்!

politics

அதிமுக பெண் வேட்பாளர் பிரச்சாரத்துக்கு சென்றபோது சேலையில் தீ பிடித்ததால், சகுனம் சரியில்லை என்று வீட்டுக்குத் திரும்பினார்.

சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திமுக வேட்பாளராக எம்.கே.மோகன், அமமுக வேட்பாளர் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் வி.பொன்ராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.சங்கர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திமுக வேட்பாளர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சமுதாய வாக்குகள் கணிசமாக தொகுதியில் உள்ளது, அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர், அந்த சமூகத்தின் வாக்குகள் குறைவாக இருந்தாலும் ஏற்கனவே இங்கே போட்டியிட்ட அனுபவத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஒவ்வொரு நாட்களையும் நாள் நட்சத்திரம் பார்த்து அடியெடுத்து வைத்து வருகிறார்.

மார்ச் 19ஆம் தேதி, கோகுல இந்திரா பிரச்சாரத்திற்கு சென்றபோது எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் வரவேற்று ஆரத்தி எடுத்தனர்.அப்போது பற்ற வைக்கப்பட்ட கற்பூரம் கீழே விழுந்து கோகுல இந்திராவின் காட்டன் சேலையில் தீப்பிடித்து விட்டது. பதறிப் போன வேட்பாளர் கோகுல இந்திரா, அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். தீப்பிடித்த சேலைக்கு பதிலாக அந்த வீட்டுப் பெண்மணி வேறு ஒரு சேலையைக் கொடுக்க சேலையை மாற்றிக்கொண்ட வேட்பாளர் கோகுல இந்திரா அப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு, தனது வீட்டுக்குத் திரும்பினார்.

வீட்டுக்குச் சென்றவர் தனக்கு நம்பிக்கையான ஜோதிடரைத் தொடர்புகொண்டு சேலையில் தீ பிடித்த விஷயத்தைப் பற்றிச் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கிறார். “வெளியில் செல்லும்போது தீ பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். ஆனால் உங்கள் சேலையில் தீ பிடித்திருப்பது அபசகுனம். உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பிரச்சாரத்தை தொடருங்கள்” என்று ஆலோசனை கொடுத்துள்ளார் ஜோதிடர்.

அதன்படியே பரிகாரம் செய்துவிட்டு பிரச்சாரத்தை மீண்டும் தொடர்கிறார் கோகுல இந்திரா

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *