qஸ்டாலின் கோரிக்கை: நிராகரித்த நீதிமன்றம்!

Published On:

| By Balaji

அவதூறு வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 8ஆம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக வேலுமணிக்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதுபோல குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும், தமிழகம் நல்லாட்சி மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இவை முரசொலி நாளிதழில் வெளிவந்திருந்தன.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்துசெய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவதூறு வழக்கை எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாகவும், ஏப்ரல் 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share