ஜெயலலிதா இடத்தில் நான்: ஓபிஎஸ்க்கு எடப்பாடி நன்றி!

Published On:

| By Balaji

முதல்வர் வேட்பாளராக அறிவித்த பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன் எனவும் அவர் கூறினார்.

புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/2dR9cjLDNC

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 7, 2020

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது, எடப்பாடி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவரை வரவேற்று அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத். தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்தார் எடப்பாடி. அவருக்கு பொன்னாடை அணிவித்து பன்னீர்செல்வம் வாழ்த்தினார். அதுபோலவே இதுபோலவே வழிகாட்டு குழுவில் இடம்பெற்ற அமைச்சர்கள், நிர்வாகிகளும் வாழ்த்து பெற்றனர்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share