சூரியனைப் பார்த்து…: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

Published On:

| By Balaji

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 20)ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது,

சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்துக்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது ஆவேசமாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,

அவர் சொல்லிக்கிட்டு இருக்கார். எங்களுக்கு என்ன இருக்குது? சூரியனைப் பார்த்து ஏதோ… அதை ஓபனா சொல்லக் கூடாது” என்று மிகக் கடுமையான முறையில் சசிகலாவை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கனவே நீதிமன்றம் சொல்லிவிட்டது. தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. ஆனால் அவருக்கு பொழுது போகவில்லை என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் மீது ஏற்கனவே காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதை பலமுறை சொல்லியாகிவிட்டது. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தான் இதை பெரிதுபடுத்தி விறுவிறுப்பாக செய்தி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியின் இந்த விமர்சனம் அமமுகவினர் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

**வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share