�நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
சுதந்திர தின உரையில் பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்துவது குறித்த பிரதமரின் அறிவிப்பு பற்றி இன்று (ஆகஸ்ட் 17) ஜெயரஞ்சன் பேசினார். பெண்களின் வாழ்க்கையை ஓரளவுக்காவது மாற்றியமைக்க இந்த அறிவிப்பு உதவும் எனக் கூறிய ஜெயரஞ்சன், “18 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு கொண்டேன் என்று கூறினாலும் கூட அது குற்றம்தான்” எனவும் குறிப்பிட்டார்.
திருமணங்கள், குழந்தை திருமணம் பற்றி சட்டங்கள் சொல்வது என்ன என்பதை விரிவாக விளக்கிய ஜெயரஞ்சன், பிரதமரின் அறிவிப்புக்கு பெண்களின் உடல்நலமும் முக்கிய காரணம் என எடுத்துரைத்தார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”