நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
மாருதி, ஸ்பைஸ் ஜெட், ஏர்டெல், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்ததாகக் கூறிய ஜெயரஞ்சன் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள்வதற்கு அதிக காலம் ஆகும் என ஐஎம்எஃப் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழல்கள், தொழில் துறைகளின் நிலைமை குறித்தும் விவரித்தார்.
கிராமப்புறத்தில் அதிக விளைச்சல் இருப்பதால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், இந்திய பொருளாதாரத்தில் கிராமப்புற பொருளாதாரம் என்பது வெறும் 15 சதவிகிதம்தான் என்றும் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”