நமது மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
இந்த நிலையில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட அறிக்கையை மையமாக வைத்து தி இந்துவில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 28) கருத்துக்களை முன்வைத்தார். உலக நாடுகளின் உணவுப் பாதுகாப்பு பற்றிய அந்த அறிக்கையில், சாப்பாட்டை தகுந்த பணம் கொடுத்து யாரெல்லாம் வாங்கிச் சாப்பிடலாம் என்பது சாரம்சமாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சாப்பாட்டை அடிப்படை உணவு, உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என மூன்று வகைகளாக பிரித்துள்ளனர் என்ற ஜெயரஞ்சன், தெற்காசிய நாடுகளில் 60 சதவிகிதம் பேரால் ஆரோக்கியமான உணவுகளை வாங்கிச் சாப்பிட முடியாது. 18 சதவிகிதம் பேரால் ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூட வாங்க முடியாது. மீதமுள்ளவர்களால் மட்டுமே ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட முடிகிறது என ஆய்வு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”