நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.
உயர்கல்வியில் சேரும் மாணவர் விகிதம் அமெரிக்காவை விட தமிழகத்தில் அதிகம் என்று புள்ளிவிவரங்களுடன் வெளியான கட்டுரை குறித்து இன்று (ஆகஸ்ட் 19) ஜெயரஞ்சன் பேசினார். தமிழகத்தின் மொத்த விகிதம் (கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ) அதிகமாக இருக்கிறது என்பதை மையமாக வைத்து அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி என்பது சாதாரணமாக நிகழவில்லை என்று குறிப்பிட்ட ஜெயரஞ்சன், ஒரு சிலருக்கு மட்டும் என்று இருந்த கல்வியை, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பொதுப் பொருளாக மாற்றும் (pubilic goods) நடவடிக்கைகளை தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக அரசுகள் மேற்கொண்டன என்றார். பெரிய மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது என்று கூறியதோடு, கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ புள்ளிவிவரங்கள் பற்றியும் விளக்கினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”