பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து ஜெயரஞ்சன் இன்று பேசினார். உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதைத் தெரிவித்த அவர், ஏழை மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் விவரித்தார்.
நவதாராளமயக் கொள்கை வந்த பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தது என்ற ஜெயரஞ்சன், அதுதொடர்பாக விரிவாக தனது கருத்துக்களை எடுத்துவைத்தார். திறமையின் காரணமாக முகேஷ் அம்பானி உலக பணக்காரர் வரிசையில் முன்னேறுகிறார் என சொல்ல முடியுமா என்று கேட்டதோடு, புதிய பொருளாதார கொள்கை குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”