Hவீழ விடாதீர்! – ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்களின் வருமானம் உள்பட வாழ்வுமுறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 13) பேசினார். ஊரடங்கு பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது என்று குறிப்பிட்ட ஜெயரஞ்சன், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் வகுப்பு எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. மறு பக்கம் வருமானத்திற்காக கிடைத்த வேலையை செய்யக்கூடிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். குடும்பத்தில் யாருக்கும் வருமானம் இல்லாததே இந்த நிலைக்கு காரணம்” என்று கூறுகிறார்.

இது 20 வருடங்களுக்கு முன் இருந்த நிலையை நோக்கி மக்களை நகர்த்துகிறதா என்ற அவர், அப்படியென்றால் சமூக நலத்திட்டங்கள் மக்களை நோக்கிச் செல்லவில்லையா என்ற கேள்வியை முன்வைத்தார். இந்த அவலங்கள் அரசின் கவனத்துக்குச் செல்ல வேண்டும், அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஜெயரஞ்சன் வலியுறுத்தினார்.

**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share