Qநமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச் சூழல் அறிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
இந்த நிலையில் மண்டலின் 120ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மண்டல் கமிஷன் அறிக்கை தொடர்பாக ஜெயரஞ்சன் இன்று (ஆகஸ்ட் 26) பேசினார். 10 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த மண்டல் கமிஷன் அறிக்கை வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிறகு அமல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மண்டல் கமிஷன் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து வெளிவந்த கட்டுரையைச் சுட்டி உரை நிகழ்த்தினார்.
மண்டல் கமிஷன் அறிக்கையை இடஒதுக்கீடு சம்பந்தமாக மட்டுமே பார்க்க முடியாது எனவும், அரசியல், சமூகத்தின் ஒரு நகர்வாகவே பார்க்க வேண்டும் என்றும் ஜெயரஞ்சன் குறிப்பிட்டார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”