t’சுயசார்பு குறித்து காமராஜர்’ – ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்.

முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அதுகுறித்து ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 16) பேசினார். ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய உரை குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்காவில் உணவு உற்பத்தி அதிகரித்ததாகவும், இதனால் 1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் பி.எல்.-480 என்னும் சட்டத்தை அறிமுகப்படுத்தி, உணவு தேவைப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்ததாகவும் ஜெயரஞ்சன் கூறினார்.

பிஎல்-480 சட்டம் food for peace ஆக மாறியது குறித்து பேசியவர், இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உணவு வழங்க அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் பற்றியும் பேசினார். இதனை அரசியல் ஆயுதமாக அமெரிக்கா எவ்வாறு பயன்படுத்தியது என்பதை விவரித்தவர், இந்த காலகட்டத்தில்தான் காமராஜர் அவ்வாறு உரையாற்றியதாகவும் கூறினார்.

**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share