ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஜெயரஞ்சன் இன்று (ஜூன் 12) பேசினார். இந்த நிறுவனங்களை சரிவிலிருந்து மீள அரசு அறிவித்துள்ள பொருளாதார தொகுப்பு குறித்த நிபுணர்களின் கருத்தை எடுத்து வைத்த அவர், தொழில் முனைவோர் ஒருவருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் விவரித்தார். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தரலாம் என்றும் குறிப்பிட்டார்.
முழுக் காணொலியையும் கீழே பார்க்கலாம்.
�,”