Qமேட்டூரில் துரைமுருகன் ஆய்வு!

Published On:

| By Balaji

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மேட்டூர் அணையை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியது. கடந்த நவம்பர் 13ஆம் தேதி இரவு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அதேசமயத்தில் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் உபரிநீர் 16 கண் மதகு வழியாகத் திறந்துவிடப்பட்டது.

அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 18,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை தனது வரலாற்றில் 41ஆவது முறையாக நிரம்பியுள்ள நிலையில், அதிக அளவிலான தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதால் கதவணை மின்நிலையங்களில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் இன்று காலை 10 மணிக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக கார் மூலம் சேலம் வரும் அவர், அணையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share