உள்ளாட்சியில் ‘ஃபுல் ஆட்சி’ திமுக!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று அக்டோபர் 12 காலை தொடங்கி இன்று விடிய விடிய நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்குச் சீட்டுகளை வகைப்படுத்துவதற்கு நேற்று மதியம் ஆகிவிட்ட நிலையில் அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்று உள்ளது.

இதுவரையிலான மொத்த முன்னணி நிலவர அடிப்படையில் 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றுகிறது. ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் திமுக கூட்டணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் திமுக 131 இடங்களிலும் அதிமுக மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலில் மொத்தமுள்ள 1,381 இடங்களில் 915 இடங்களில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. அதிமுக 183 இடங்களிலும் மற்ற கட்சிகள் 129 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோது நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக சுமார் 50 சதவிகிதம் இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் பிஸியாக இருக்கும் அதிமுக பத்து சதவிகிதத்துக்கும் கீழ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

**வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share