திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு எப்படி நடக்கும்: அழகிரி

politics

மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நேற்று மாலை கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த மாநாட்டில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரையாற்றினார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்லபிரசாத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் உரையாற்றினர்.

கே.எஸ்.அழகிரி உரையாற்றும்போது, “நேருவுக்கு கடவுள், மதம் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், இந்த இரண்டின் மீதும் நம்பிக்கை கொண்ட காந்தியின் சீடராகவே நேரு இருந்தார். அதுதான் ஜனநாயகம். பாஜகவினரின் கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் அவர்கள் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம்.

காங்கிரஸிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், சுயமரியாதையுள்ள கட்சி. காங்கிரஸ் தற்போது புதிய பாதையில் பயணிக்கிறது. மோடியை வீழ்த்த மாபெரும் வீரனான ராகுல் காந்தியால் மட்டும்தான் முடியும்” என்று தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டில் பேரம் நடத்த மாட்டோம் என ஏற்கனவே தினேஷ் குண்டு ராவ் தெரிவித்த நிலையில் அதைப் பற்றி கே.எஸ்.அழகிரி, “நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதைப் பெறுவோம். அதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் கொள்கை” என கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து விளக்கினார்.

தினேஷ் குண்டுராவ், “பரஸ்பர புரிதல் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் ஏர்கலப்பையோடு பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால், அனுமதியின்றி பேரணி செல்லக்கூடாது என காவல் துறையினர் தடுத்தனர். இதனால் காங்கிரஸாருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *