xதேமுதிக – அதிமுக கூட்டணி: இன்றைய நிலவரம் என்ன?

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை என்ன என்பது பற்றி இழுபறி நீடித்து வருகிறது.

ஒருபக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தை; இன்னொரு பக்கம் அதிமுகவை பகிரங்கமாக மேடைகளில் தாக்கிப்பேசுவது என்ற இருவேறு போக்குகளால் தேமுதிக மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது அதிமுக.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் அதைவிட அதிகமாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக முதல் நிபந்தனை விதித்தது. ஆனால், அதை புறக்கணித்து அதிமுக பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் மட்டுமே தருவதாகப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

ஹோட்டல் லீலா பேலஸில் நடந்த பேச்சுவார்த்தைகளும் முடிவு எட்டப்படாமல் இழுத்த நிலையில்…‌ இன்னொரு பக்கம் அமமுக உடனும் பேசிக்கொண்டிருந்தார் சுதீஷ். அமமுக தரப்பிலும் தேமுதிகவுக்கு அழைப்பு கொடுக்க இந்தப் பின்னணியில்தான், ஆரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவை கடுமையாக தாக்கினார் சுதீஷ்.

‌நாங்கள் அதிமுகவிடம் கெஞ்சவில்லை. அதிமுகதான் கூட்டணி சேர எங்களிடம் கெஞ்சுகிறது” என்று சுதீஷ் பேசிய பேச்சு அதிமுக தலைமையை கடுமையான டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது.

சுதீஷ் இவ்வாறு பேசிய பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை சசிகலா அறிவித்தவுடன் கடுமையான அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

இன்னொரு பக்கம் திமுகவின் எ.வ.வேலுவுடனும் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். இதை

எல்லாம் அதிமுகவும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

“நம்முடன் பேசுகிறார்கள். நம்மை தாக்கி வெளியேயும் பேசுகிறார்கள். அதே நேரம்

கூட்டணி பற்றி திமுக உடனும் அமமுக உடனும் பேசுகிறார்கள்” என்பதையெல்லாம் அறிந்து கோபமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’12 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா. இதுதான் தேமுதிகவுக்கு தரமுடியும். வேண்டுமென்றால் கையெழுத்திட சொல்லுங்கள். இல்லையென்றால் அவர்களே முடிவு எடுத்துக் கொள்ளட்டும்’ என்று அதிமுக குழுவினரிடம் கறாராக தெரிவித்து விட்டார்.

ஆனால் பிரேமலதாவோ 20 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அதிமுக தேமுதிக கூட்டணி 12க்கும் 20க்கும் இடையே இழுத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக மனது வைத்தால் ஓரிரு தொகுதிகள் அதிகம் பெறக்கூடும் என்ற நிலையிலேயே இருக்கிறது தேமுதிக.

**வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share