பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போலியான செய்திகளை வெளியிடுவதாக இந்தியா கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த பதிவை இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்களைக் குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர் என்று கூறி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அதில், உபியில் முஸ்லீம்களுக்கு எதிரான காவல்துறையின் படுகொலை என்று கேப்ஷனாக பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அது போலியான வீடியோ என்பது தெரியவந்தது. அதாவது, அது உபியில் எடுக்கப்பட்ட வன்முறை வீடியோ இல்லை என்று தெரியவந்தது.
Repeat Offenders…#Oldhabitsdiehard pic.twitter.com/wmsmuiMOjf
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) January 3, 2020
அது வங்க தேசத்தில் நடத்த ஒரு வன்முறைச் சம்பவம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உபி காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், மே, 2013, வங்கதேசத்தின் டாக்காவில் நடந்த ஒரு சம்பவம் இது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து இம்ரான் கானுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ரவீஷ் குமார், ”போலி செய்திகளை ட்வீட் செய்யுங்கள். பிடிபடுங்கள். ட்வீட்டை நீக்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதோடு #Oldhabitsdiehard என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.
ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி சையத் அக்பருதீனும் இம்ரான் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.�,”