துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நாள்தோறும் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று (மே 25) திடீரென அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான பரிசோதனைக்காகவே ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
69 வயதாகும் பன்னீர்செல்வம் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக கோவை கணபதி பகுதியில் இருக்கும் ஆரியவைத்திய ஃபார்மசியில் அவ்வப்போது ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,