Pடெல்லி வன்முறை: ஈரான் கண்டனம்!

Published On:

| By Balaji

டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு அதிகாரபூர்வமாகப் பதிலளித்த நான்காவது முஸ்லிம் நாடு என்ற பட்டியலில் ஈரானும் சேர்ந்திருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் டெல்லியில் நான்கு நாட்கள் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டுகிறது என்கிறார்கள்.

டெல்லி கலவரங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று நம் நாட்டுக்குள் இருந்த பல அமைப்புகள் கருத்து தெரிவித்த நிலையில் சர்வதேச அளவில் இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான் நாடுகள் கண்டித்தன.

இந்த நிலையில் ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் நேற்று (மார்ச் 2) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலைகளைக் கண்டிக்கிறோம். புத்தியில்லாத குண்டர்களை மேலோங்க விடக் கூடாது என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அலையை ஈரான் கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஈரான் இந்தியாவின் நண்பராக இருந்து வருகிறது. அனைத்து இந்தியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், புத்தியில்லாத குண்டர்கள் மேலோங்க விடக் கூடாது என்றும் இந்திய அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமைதியான உரையாடல் மற்றும் சட்டத்தின் ஆட்சி மூலம்தான் முன்னேற்றமான பாதைக்குச் செல்ல முடியும்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த ட்விட்டர் இழையைப் பிடித்துக் கொண்டு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றி உலக அளவில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத் தரப்பில் இன்னும் ஈரானுக்கும் அதிகாரபூர்வப் பதில் வரவில்லை.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share