ஓமிக்ரானை அடுத்து ஐஹூ: புதிய கொரோனா வைரஸ்! 

politics

கொரோனாவின் முதல் அலை,அடுத்து இரண்டாம் அலை என வைரஸ் திரிபு ஏற்பட்டு  உலகத்தைத் தாக்கியது. டெல்டா வைரஸை அடுத்து கடந்த மாதம் முதல் ஓமிக்ரான் என்ற புதிய திரிபு கொரோனா வைரஸ் உலகை தாக்கி வருகிறது. ஒமிக்ரானை தடுக்க ஊரடங்குக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில்,  மருத்துவ  விஞ்ஞானிகள் தெற்கு பிரான்சில்  கொரோனா வைரஸின்  இன்னொரு புதிய  உருமாற்றத்தை இன்று (ஜனவரி 4) அடையாளம் கண்டுள்ளனர்.

‘IHU’ என அறியப்படும், B.1.640.2 மாறுபாடு கொண்ட இந்த வைரஸ், மெடிட்டரேனி தொற்றியல் ஆய்வுக் கூடத்தில்  உள்ள ஆராய்ச்சியாளர்களால் குறைந்தது 12  தொற்றாளர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்குச் சென்று வந்தவர்கள் மூலம் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை  மிக விரைவில் கண்டறிவோம் என்று அந்த   ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 “தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான தடுப்பூசிகள் SARS-CoV-2 இன் ஸ்பைக் புரதத்தை இலக்காகக் கொண்டுள்ளன, இது வைரஸ் செல்களுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. N501Y மற்றும் E484K பிறழ்வுகள் முன்பு பீட்டா, காமா, தீட்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளிலும் காணப்பட்டன  இப்போது கண்டறியப்பட்ட  மரபணுக்களின் பிறழ்வு தொகுப்பு மற்றும் பைலோஜெனடிக் நிலை ஆகியவை  முந்தைய வரையறையின் அடிப்படையில் IHU என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய மாறுபாட்டைக் குறிக்கிறது என்று பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த வகை வைரஸ்  இதுவரை  மற்ற நாடுகளில் அடையாளம் காணப்படவில்லை.  இந்தியாவில், இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1,892 ஓமிக்ரான் தொற்றுகள்  கண்டறியப்பட்டுள்ளன.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *