dகொரோனா அபராதங்களுக்கு எதிராக வழக்கு!

politics

கொரோனா அபராதத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்துவந்த நிலையில், அதில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டது. தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிவித்த தமிழக அரசு, அதுதொடர்பான அறிவிப்பாணையை அரசிதழிலும் வெளியிட்டது.

அதன்படி, பொது இடத்தில் மாஸ்க் அணியாதது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், வழிகாட்டு நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிக்காதது உள்ளிட்ட செயல்களுக்கு 200 ரூபாயில் தொடங்கி 5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் அபராதங்கள் லட்சக்கணக்கில் வசூலாகி வருகின்றன.

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ராமாபுரத்தை முத்துக்கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 20) பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவில், தனிநபர் விதிகளைப் பின்பற்றாவிட்டால் அது குற்றம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ஆளுநர் அறிவிக்காமல் சுகாதாரத் துறைச் செயலாளர் அளவிலான நிர்வாக உத்தரவாகவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அபராதம் வசூலிக்க வகை செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு வரும் அக்டோபர் 22ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *