y‘பெரிய ஊசியா போடுங்க’: கிண்டல் செய்த பிரதமர்!

Published On:

| By Balaji

இன்றிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் முதல் டோசை போட்டுக்கொண்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற செவிலியர் பிரதமருக்குத் தடுப்பூசியைச் செலுத்தினார்.

பிரதமருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து செவிலியர் நிவேதா கூறுகையில்,  “நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இன்று என்  வாழ்நாளில் முக்கியமான நாள். மோடி ஜி-யை நேரில் பார்த்தேன். அவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக என்னை வரச் சொல்லி இருந்தார்கள். பிரதமருக்கு கோவாக்சின் முதல் டோசை செலுத்தினோம். 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போடப்படும்.

PM @narendramodi takes #COVAXIN as nationwide drive to cover senior citizen begins. PM hails doctors and scientists for their remarkable role in the fight against #COVID19, appeals to all eligible to take the #vaccine#LargestVaccineDrive#IndiaFightsCOVID19 #united2fightcorona pic.twitter.com/47tNuXg5UX

— DD News (@DDNewslive) March 1, 2021

பிரதமர் உள்ளே வந்ததும், எங்கிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் விசாரித்தார். என்னுடன் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியரும்  இருந்தார். நான் புதுச்சேரி என்று சொன்னதும், வணக்கம் என தமிழில் பேச முயற்சி செய்தார். பெரிய ஊசியாக எடுத்து வந்துள்ளீர்களா, வெட்னரி ஹாஸ்பிடலில் பயன்படுத்தப்படும் ஊசியை எடுத்து வந்துள்ளீர்களா என்று கிண்டல் செய்தார்.

அவர் கேட்டது எங்களுக்குப் புரியவில்லை.  அப்போது அரசியல் வாதிகளுக்கு எல்லாம் தோல் ரொம்ப அழுத்தமாக இருக்கும். பெரிய ஊசியா எடுத்துட்டு வந்து போடுங்க என்று சொன்னார்.

இதையடுத்து சாதாரண ஊசிதான் என கூறி அவருக்குச் செலுத்தினோம். 30 நிமிடம் கண்காணிப்பிலிருந்தார்.  எந்த பிரச்சினையும் இல்லை.  நான் ஊசி போட்டது கூட அவருக்குத் தெரியவில்லை. வலியே இல்லை என்றார்.

 அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்” என்று இன்றைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share