�
தமிழகத்தில் இன்று (ஜூன் 8) ஒரே நாளில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,74,704ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 9,992 பேர் ஆண்கள், 8,031 பேர் பெண்கள் ஆவர்.
தனியார் மருத்துவமனைகளில் 150 பேர், அரசு மருத்துவமனைகளில் 259 பேர் என இன்று மட்டும் 409 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தபலி எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 31,045 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 20,28,344 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று மட்டும் 1,70,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,18,595 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 1437 பேரும்,செங்கல்பட்டில் 773 பேரும், கோவையில் 2439 பேரும், ஈரோட்டில் 1596 பேரும், சேலத்தில் 975 பேரும், திருப்பூரில் 995 பேரும், தஞ்சையில் 770 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 16 பேரும், சென்னையில் 42 பேரும், கோவையில் 44 பேரும், திண்டுகல்லில் 22 பேரும், கன்னியாகுமரில் 16 பேரும், சேலத்தில் 25 பேரும், திருவள்ளூரில் 22 பேரும், திருப்பூரில் 18 பேரும், திருச்சியில் 18 பேரும் கொரோனாவால் பலியாகினர்.
**-வினிதா**
�,