e
தமிழகத்தில் இன்று(ஜூன் 3) ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்துது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,72,751 ஆக அதிகரித்துள்ளது.இன்று பாதிக்கப்பட்டவர்களில் 13,448 பேர் ஆண்கள், 10,957 பேர் பெண்கள் ஆவர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 32,221 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 18,66,660 பேர் குணமடைந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் 213 பேர், அரசு மருத்துவமனைகளில் 247 பேர் என 460 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 25,665 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 1,79,438 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,80,426 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 2062 பேரும்,செங்கல்பட்டில் 983 பேரும், கோவையில் 2980 பேரும், ஈரோட்டில் 1671 பேரும், சேலத்தில் 1253 பேரும், திருப்பூரில் 1264 பேரும், தஞ்சையில் 1020 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 47 பேரும், சென்னையில் 68 பேரும், கோவையில் 48 பேரும், சேலத்தில் 33 பேரும், ராணிபேட்டையில் 12 பேரும், வேலூரில் 17 பேரும் திருப்பூரில் 14 பேரும் கொரோனாவால் பலியாகினர்.
**-வினிதா**
�,