காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தல்!

Published On:

| By Balaji

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் 2022 ஆம் வருடம் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ உயர் குழுவான காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று அக்டோபர் 16 டெல்லி தலைமையகத்தில் கூடியது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் உள்ளிட்ட 6 பேர் பங்கு பெறாத நிலையில், மற்ற அனைவரும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய சோனியா காந்தி தனக்கு எதிராக 23 தலைவர்கள் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.

காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. என்னிடம் பேசுவதற்கு நீங்கள் எந்த மீடியாவையும் நாட வேண்டியதில்லை. நேரடியாக என்னிடம் பேசலாம். நான் ஏற்கனவே கூறியபடி கட்சியின் அமைப்பு தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதுவரை முழுநேர தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார் சோனியா காந்தி.

மேலும் இக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் உள்ளிட்ட அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்படும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2022 ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெறும்.

வட்டார காங்கிரஸ் தலைவர் தேர்தல் 2022 ஏப்ரல் -மே மாதங்களில் நடைபெறும் அதனடிப்படையில்

மாநில காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஜூலை ஆகஸ்டில் நடைபெறும்.

இறுதியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

**வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share