காங்கிரஸ் வேட்பாளர்கள்: வழக்கம்போல் வாரிசுகள்!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 21 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் டெல்லி தலைமை நேற்று (மார்ச் 13) இரவு வெளியிட்டுள்ளது.

இதில் எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர்களே பெரிதும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தற்போதைய தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமிக்கு அவரது காரைக்குடியில் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக திருவாடானையில் அவரது மகன் கரு மாணிக்கம் போட்டியிடுகிறார்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆகிய வாரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். ஓமலூரில் மோகன் குமாரமங்கலம் போராடி சீட் பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு எதிர்பார்க்கப்பட்டது போலவே மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொன்னேரி- துரை சந்திரசேகர்,

ஸ்ரீபெரும்புதூர்- கே செல்வபெருந்தகை

சோளிங்கர்- முனிரத்தினம்

ஊத்தங்கரை- ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்

ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்

ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவெரா

உதகமண்டலம்- ஆர்.கணேஷ்

கோயம்புத்தூர் (தெற்கு) : மயூரா எஸ் ஜெயக்குமார்

உடுமலைப்பேட்டை- தென்னரசு

விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி-ராமச்சந்திரன்

காரைக்குடி- மங்குடி

மேலூர்- ரவிசந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ்

சிவகாசி- அசோகன்

திருவாடனை- கரு.மாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ்

தென்காசி – பழனி

நாங்குநேரி- ரூபி மனோகரன்

கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் – விஜய் வசந்த்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share