ொரோனா இரண்டாம் அலையின்போது, மக்களுக்கு தமிழக அரசால் ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது வேலம்மாள் பாட்டியும், மக்களோடு மக்களாக அரசு வழங்கிய நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருள்களை பெற்றுக்கொண்டார். அதை வாங்கிக் கொண்ட பாட்டி வேலம்மாள் சந்தோஷத்தில், தனது பொக்கை வாய்காட்டி சிரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பலரும் தங்களது வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் முகப்பு படமாக வைத்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலினும், அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படத்தின் மூலம் பாட்டியைக் கவனிக்க யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பதும், பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பதும் அரசின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, வருவாய்த் துறையினரின் பரிசீலனைக்குப் பின்பு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கடந்த மாதம் வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரிசெய்ய நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது முதல்வரைச் சந்தித்த பாட்டி வேலம்மாள், தனக்கு ஓய்வூதியம் கிடைக்க செய்ததற்கு நன்றி தெரிவித்தார். வயது மூப்பு காரணமாக பாட்டி வேலம்மாள் நாற்காலியில் அமர்ந்திருக்க, நின்றபடியே முதல்வர் மு.க.ஸ்டாலின் குனிந்து, அவரிடம் பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
**-வினிதா**
[முதல்வரைச் சந்தித்த புன்னகை அரசி!
+1
+1
+1
+1
+1
+1
+1