கொரோனா பரவல்: தயார் நிலையில் இருக்க உத்தரவு!

politics

கொரோனா பரவல் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்குத் தேவையான வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 10 தினங்களில் அதிகரித்து 200க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறை, காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “கொரோனா பரவல் மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். சிகிச்சை வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு பணிகளைச் சுகாதாரத் துறை உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

புதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் என 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *