[அமைச்சரை நலம் விசாரித்த முதல்வர்!

Published On:

| By Balaji

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களைத் தாண்டி நகர்ந்து வருகிறது. முன்களப் பணியாளர்கள் போலவே அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் உள்பட 30க்கும் மேற்பட்ட அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி வசந்தகுமார், நாகை செல்வராஜ் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதேபோல அவரது மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளான செய்தியறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி,மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதவிர முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share