yபத்திரிகை அதிபர்களுக்கு போன் போட்ட எடப்பாடி

politics

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக் கிழமை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகமான தனது இல்லத்துக்கு சில அதிகாரிகளை மட்டும் அழைத்தார். மாலை வேளையில் வந்த அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவர் சில குறிப்பிட்ட பத்திரிகை அதிபர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு போன் போடுமாறு கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகை அதிபர்களுக்கு அதிகாரிகள் போன் போட்டுக் கொடுக்க, அவர்களிடம் பேசிய முதல்வர், அச்சுப் பத்திரிகைகள் நிலைமை பற்றி விசாரித்துவிட்டு, தமிழக அரசு தற்போதைய சூழலில் செயல்படும் விதத்தை சுட்டிக் காட்டி, தமிழக அரசைப் பற்றி பாராட்டி எழுதாவிட்டாலும் குறை கூறாமல் எழுதுங்களேன் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் பத்திரிகை அதிபர் ஒருவரிடம் சுமார் பத்து நிமிடங்கள் வரைக்கும் பேசிய முதல்வர், அரசியல் ரீதியாக சசிகலா குறித்து அந்தப் பத்திரிகையில் வெளிவரும் சில செய்திகளையும் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார் என்கிறார்கள் கிரீன்வேஸ் வட்டாரத்தில். ‘கலைஞர் சிஎம் ஆக இருக்கும்போது ரெகுலராக பத்திரிகை அதிபர்களுடன் பேசுவார். பாராட்டுச் செய்தி வந்தாலும், விமர்சன செய்தி வந்தாலும் அதுபற்றிய தன் கருத்துகளை கூறுவார். ஜெயலலிதா அதுபோல எந்தப் பத்திரிகை அதிபர்களிடமும் பெரும்பாலும் பேசுவதில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கொரோனா காலத்தில் சில பத்திரிகைகளில் குறைகளை அதிகம் சுட்டிக் காட்டுவதாக உணர்ந்தே இதுபோல பேசியிருக்கிறார். இது நல்ல மூவ்” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

மேலும், ‘சிஎம் வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் உயரதிகாரிகளைத் தொந்தரவு செய்ய மாட்டார். ஆனால் இப்போது கொரோனா தொற்று காலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விவாதிக்கிறார்’ என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *