நீட் விலக்கு: ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு!

Published On:

| By Balaji

�தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்தித்துப் பேசினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகக் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு நீட் விவகாரத்தில் கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களின் ஆதரவை கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த சூழலில் இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். அப்போது நீட் விலக்கு மசோதா பற்றியும், கொரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனி செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நேற்று முன் தினமே, முதல்வர் ஆளுநரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதில் சில குழப்பங்கள் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.

குழப்பங்களின் பின்னணி என்ன என்பதை நாளை காலை பதிப்பில் பார்ப்போம்…

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share