�
தமிழகத்தில் மே மாத மத்தியில்தான் கொரோனா உச்சத்தில் இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று(ஏப்ரல் 23) செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், “லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும். ஏனெனில், தொற்று அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
பாதிப்பை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையும். ஒரு சிலர் 4 நாட்களில் டிஸ்சாரஜ் செய்யப்படலாம். சிலர் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். சென்னையில் 4 நாட்கள் தொடர்ந்து மக்கள் முகக்கவசம் அணிந்தாலே பாதிப்பு குறைந்து விடும். மே மாதம் மத்தியில் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், மக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சென்னையில் பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. அங்கே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது” என தெரிவித்தார்.
**அபிமன்யு**
.�,