nகோவை தெற்கில் லீடிங்கில் இருக்கும் கமல்!

politics

கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு ஆரம்பமான தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. அதில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளனர்.

கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதல் சுற்றில் 1391 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 1345 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 860 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முதலில் பின்னடைவை சந்தித்து வந்த கமல், பிறகு மற்ற இருவரையும் பின்னுக்கு தள்ளி முன்னிலையை தக்க வைத்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் பின்னடைவை சந்தித்துள்ளார். எனினும், முன்னணி கட்சிகளை விட இதர சிறு கட்சிகள் எந்த இடத்திலும் லீடிங் வராத நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல் லீடிங்கில் உள்ளார்.

இந்த லீடிங் போல் தகவல் பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *