சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29 ) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் , ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு பற்றிய டேவிதார் அறிக்கை , ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் , ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
தலைமைசெயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘உங்கள் சொற்படியே நடக்கிறேன்’ : கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்