ஒரு நல்லாசிரியர் தேசத்தை உருவாக்குபவர்: குடியரசுத் தலைவர்!

politics

மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை ஒன்றிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களின் வசம் உள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.

இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 44 ஆசிரியர்களுக்குத் தேசிய விருதுகளைக் காணொலி வாயிலாக வழங்கினார் குடியரசுத் தலைவர். தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா மற்றும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி ஆகிய இருவரும் இவ்விருதை பெற்றனர்.

விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். மக்கள் தங்கள் ஆசிரியர்களை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வார்கள். அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்களை வளர்க்கும் ஆசிரியர்கள், அவர்களுக்கான உரிய மரியாதையை எப்போதும் பெறுவார்கள்

சிறந்த எதிர்காலத்திற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுச்சியூட்ட வேண்டும்.

மாணவர்களிடையே பாடத்தில் ஆர்வம் ஏற்படத் தூண்டுவது ஆசிரியர்களின் கடமை. ஒவ்வொரு மாணவர்களின் பிரத்தியேக திறமைகள், திறன்கள், சமூகப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் . ஒரு நல்ல ஆசிரியர் ஒரு ஆளுமையை உருவாக்குபவர், ஒரு சமுதாயத்தை உருவாக்குபவர் மற்றும் ஒரு தேசத்தை உருவாக்குபவர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா தொற்று நெருக்கடியின் காலகட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காதபோதும் குழந்தைகளின் கல்வியைத் தொடர ஆசிரியர்கள் குறுகிய காலத்தில் மின்னணு தளங்களை உபயோகிப்பது குறித்துக் கற்றுக்கொண்டு கற்பித்தலைத் தொடர்ந்து மேற்கொண்டனர். கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, சர்வதேச அறிவுசார் வல்லரசாக இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *