}சத்துணவு அமைப்பாளர் தேர்வு நடைமுறை நிறுத்தம்!

politics

�சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு என்பதால் ஏராளமானோர் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

விரைவில் இவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா காலமான தற்போது அதிகமானோரை ஒரே நேரத்தில் எப்படி அழைத்து நேர்காணல் செய்வது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *