qபாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Published On:

| By admin

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தின் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயம் சென்னை தி. நகர் வைத்தியநாதன் தெருவில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி கமலாலயத்தின் உட்பகுதியில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள்.
நள்ளிரவு நேரம் என்பதால் பாதுகாப்புப் பணியாளர்கள் தவிர வேறு யாரும் அலுவலகத்தில் இல்லை. மேலும் வாசல் கதவு மூடப்பட்டு இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் சொல்ல, உடனடியாக விரைந்து வந்த போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் பற்றி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share