அசாமில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாஜக!

politics

அசாமில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

பாஜக 80 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்த முன்னணி நிலவரம் காங்கிரஸூக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், இந்த முறையும் அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

**-அபிமன்யு**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.